



யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டார அவர்களின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அரியாலைப் பகுதியைச் சேர்ந்த, 26 மற்றும் 32 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் 10 போதை மாத்திரைகளுடனும், மற்றையவர் 120 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.