

பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி உத்தியோகத்தர்களால் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (30.10.2024) மு.ப 10.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.




எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது பற்றி மக்களுக்கு தெளிவூட்டல் செயற்பாடுகளில் ஈடுபடுபடவுள்ள,பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உதவி பிரதேச செயலாளர்கள், நிர்வாக கிராம அலுவலர்கள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு தெளிவூட்டும் செயலமர்வு நடைபெற்றது.
பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி விளக்கமளிக்கப்பட்டது.