
சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் கந்த சஷ்டி ஆரம்ப நாளான 02/11/2024 சனிக்கிழமை தொடக்கம் சூரசம்ஹார நாளான 07/11/2024 வியாழக்கிழமை வரை முருகப்பெருமான் மாலையில் வெளிவீதி வலம் வரும் போது பஜனை இடம் பெறவுள்ளதாக சிவகுரு ஆதீன முதல்வர் வணக்கத்திறக்குரிய வேலன் சுவாமிகள் அறிவித்துள்ளார்.
இப் பஜனை நிகழ்வில் பங்குபற்றி நல்லைக் கந்தப் பெருமானின் திருவருளைப் பெற்றேகுமாறு மாணவர்களுக்கும், முருகப்பெருமான் அடியவர்களுக்கும் சிவகுரு ஆதீனம் அழைப்பு விடுத்துள்ளது.
சிவகுரு ஆதீனம்
692, பருத்தித்துறை வீதி, நல்லூர்.
077 222 0103