






அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க முன்னாள் தலைவர் தங்கராசா கார்த்தீபன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க பொது முகாமையாளர் திரு பிரேம் பிரதம விருந்தினாராக கபந்துகொண்டு பனம் விதை நடுகை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க முன்னாள் பொருளாளர் கி.விசிகரன், மற்றும் முன்னாள் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்து சங்க நிர்வாகிகள் கிராம மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதே வேளை எதிர்வரும் சனி ஞாயிறு தினங்களில் கொட்டோடை கிராமத்தில் 10000 பயன்தரும் மரங்கள் நாட்டப்படவுள்ளமையும் குறிப்பிட தக்கது.