
யாழ் இந்திய துணை தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலக இந்தியன் சென்ரலில் மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பாரத ரத்னா அப்துல் கலாமின் 90ஆவது பிறந்த தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
யாழ் இந்திய துணை தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொது நூலக பிரதம நூலகர் தலைமையில் இடம்பெற்ற குடியரசுத் தலைவரின் பிறந்த நாள் தின நிகழ்வில் யாழ் இந்திய துணைத்தூதுவர்,வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி வி கே சிவஞானம், யாழ் மாநகர சபை முதல்வர்,மாநகர சபை உறுப்பினர் கலந்து கொண்டு யாழ் பொது நூலகத்தில் உள்ள அப்துல் கலாமின் திரு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தற்போதுள்ள கொரோனா இடர் நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட வர்களின் பங்குபற்றுதலுடன் சுகாதார நடைமுறையை பின்பற்றி இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அதிதிகளின் உரையும் இடம்பெற்றது.