காணி பொலிஸ் அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு தேவை – சிங்கள இளைஞர்கள் எடுத்துரைப்பு!

காணி பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கி, 13வது சீர்திருத்தத்தமானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும். மாகாணசபை முறைமை மூலம் தமிழ் மக்களுடைய உரிமைகள் பாதுக்காப்பட வேண்டும் என தென்னிலங்கையில் உள்ள சகோதரமொழி பேசும் இளைஞர் அமைப்பின் பிரதிநிதியான திரு.அர்ஜுன தெரிவித்துள்ளார்.
மாகாணசபை முறைமையை வலுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அரசியல் பிரமுகர்களுடன் குறித்த இளைஞர் குழுவினர் சந்திப்புகளை நடாத்தி, அவர்களது கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று முன்தினமும், நேற்றும்  வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து, இங்குள்ள அரசியல் பிரமுகர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் சிங்கள மக்களுடைய கோரிக்கைகளையும், தமிழ் மக்களுடைய
வேண்டுகோள்களையும், பற்றி கலந்துரையாடினோம்.
அவர்கள் காணி, பொலிஸ் பாதுகாப்பு போன்றவற்றை கோரியிருந்தனர். தமிழ் சிங்கள மக்கள் இணைந்தால் நாங்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்.
மேலும் சிங்கள மக்கள் நினைக்கிறார்கள் மாகாணசபை தேர்தல் என்பது தமிழ், சிங்களம் என நாட்டை இரண்டாக பிரித்து நடாத்துவது என்று. ஆனால் அவ்வாறு இல்லை என்பதை நாங்கள் சிங்கள மக்களுக்கு எடுத்துரைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews