
யாழ்ப்பாணம் மாவட்டத்திறக்கு என ஒரு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கி அதனூடாக மக்களினுடைய பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்க்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர சபை மேஜருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், புனிதநகர் பகுதியில் மக்களுடன் இடம் பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது. 











இம்முறை மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பாக கடந்த காலங்களில் பாராளுமன்றம் சென்றவர்கள், மக்களுக்கு எதுவும் செய்யதாவர்களை நிராகரிக்க வேண்டும் என்றும், இளைஞர்களை தெரிவு செய்து அவர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார்
இதே வேளை அங்கு கருத்து தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சிறப்பரன் பெண்கள் தமது விருப்பு வாக்குகளை பெண்களுக்கே வழங்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் புனிதநகர், கற்கோவளம் பகுதி இளைஞர்கள், பெண்கள் என பலரும் கலந்துகொண்டனர்