
*_꧁. ஐப்பசி: 𝟮𝟲
꧂_*
*_ செவ்வாய்- கிழமை_
*
*_ 𝟭𝟮• 𝟭𝟭• 𝟮𝟬𝟮𝟰
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற லாபம் உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உபரி வருமானம் குறித்த எண்ணங்கள் மேம்படும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது. தம்பதிகளுக்கு இடையே அனுசரித்துச் செல்லவும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.
அஸ்வினி : லாபகரமான நாள்.
பரணி : அறிமுகம் உண்டாகும்.
கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் – ராசி:
_*
எதையும் சமாளிக்கும் பக்குவம் மனதளவில் பிறக்கும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்திருந்த சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் மறையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
கிருத்திகை : பக்குவம் பிறக்கும்.
ரோகிணி : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
மிருகசீரிஷம் : தாமதங்கள் மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம்- ராசி:
_*
முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். சில அனுபவங்களால் புதிய பாதைகள் புலப்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு, வாகனங்களை சரி செய்வீர்கள். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். அசதி மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : அனுபவங்கள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் – ராசி:
_*
திட்டமிட்ட காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாலின மக்களால் நன்மை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உயர்வான சூழல் ஏற்படும். புதிய துறை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : ஒத்துழைப்பான நாள்.
ஆயில்யம் : ஈடுபாடு ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் – ராசி:
_*
நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில இடமாற்றங்களால் சஞ்சலங்கள் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
மகம் : வாதங்களை தவிர்க்கவும்.
பூரம் : சஞ்சலமான நாள்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி – ராசி:
_*
திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். நெருக்கமானவர்கள் இடத்தில் அன்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
உத்திரம் : அன்பு அதிகரிக்கும்.
அஸ்தம் : முடிவுகள் கிடைக்கும்.
சித்திரை : ஆரோக்கியம் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் – ராசி:
_*
கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். தம்பதிகளுக்குள் புரிதல் மேம்படும். கலைஞர்களுக்கு கற்பனை திறன் அதிகரிக்கும். விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். உயர் பதவியுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களுக்கிடையே புரிதல் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.
சித்திரை : ஆர்வமின்மையான நாள்.
சுவாதி : லாபகரமான நாள்.
விசாகம் : புரிதல்கள் அதிகரிக்கும்
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம் – ராசி:
_*
தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கமிஷன் தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். பணி நிமித்தமான செயல்களில் சற்று கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களின் ரசனைகளை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதுமையான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
விசாகம் : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : புதுமையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு – ராசி:
_*
பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். உறவினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். தவறிப்போன சில பொருட்கள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உற்பத்தி துறைகளில் புதிய வாய்ப்புகள் அமையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.
மூலம் : மாற்றம் உண்டாகும்.
பூராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
உத்திராடம் : வாய்ப்புகள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் – ராசி:
_*
செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் கொள்முதல் அதிகரிக்கும். பணி சார்ந்த சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்துவந்த தயக்கம் குறையும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
உத்திராடம் : அனுபவம் வெளிப்படும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : தயக்கங்கள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் – ராசி:
_*
உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பற்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.
அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும்.
சதயம் : பிரச்சனைகள் குறையும்.
பூரட்டாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் – ராசி:
_*
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் சற்று கவனம் வேண்டும். வித்தியாசமான கனவுகளால் குழப்பம் உண்டாகும். செயல்திறனில் ஒருவிதமான சோர்வு வெளிப்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : சோர்வுகள் வெளிப்படும்.
ரேவதி : மதிப்புகள் அதிகரிக்கும்.
*┈┉┅━•• ••━┅┉┈*