
யாழ்ப்பாணம் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் 2024 ம் ஆண்டிற்க்குரிய பரிசளிப்பு விழா கல்லூரி மண்டபத்தில் பாடசாலை அதிபர் திருமதி சுப்பிரமணிய குருக்கள் தலமையில் காலை 10:00 மணியளவில் ராஜேந்திரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமானது.














இதில் முதல் நிகழ்வாக நிகழ்வின் விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் இசை முழங்க வரவேற்க்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டனர்.
அங்கு விருந்தினர்கள் மங்கல சுடர்களை ஏற்றிவைத்தனர்.
அதனை தொடர்ந்து ஆசி உரை, வரவேற்பு உரை, வரவேற்பு நடனம், என்பன இடம் பெற்றதனை தொடர்ந்து கல்லூரி அதிபரின் தலமை உரை இடம் பெற்றதை தொடர்ந்து கல்லூரியில் பல்துறைகளின் சாதனயாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கபந்துகொண்ட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பல் வைத்திய நிபுணர் திருமதி மிதுலா விமல்நாத், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி அந்தராசா, முன்னாள் வலய கல்விப் பணிப்பாளர் தமிழ்மாறன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், அயல் பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்கள், என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.