மாவட்ட ரீதியில் பதிவான வாக்குப் பதிவு…!

2024 பாராளுமன்றத் தேர்தலில் மாவட்ட
ரீதியாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதம்
தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு 65%
நுவரெலியா 68%
குருநாகல் 64%
மட்டக்களப்பு 61%
மாத்தறை 64%
புத்தளம் 56%
அனுராதபுரம் 65%
பதுளை 66%
இதேவேளை வாக்காளர் பட்டியலின்படி ஒரு கோடியே எழுபத்தி ஒரு லட்சத்து நாற்பதாயிரத்து முந்நூற்று ஐம்பத்து நான்கு வாக்காளர்கள் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர்.

22 தேர்தல் மாவட்டங்களில் கம்பஹா மாவட்டம் அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக காணப்படுவதுடன் அந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 81,129 ​பேர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்து 65,351 ஆகும்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறைந்தளவான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த எண்ணிக்கை மூன்று இலட்சத்து 6,081 ஆகும்.அதேநேரம் 2034 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.நள்ளிரவுக்குள் முதல் தபால் வாக்கு முடிவுகளை வௌியிட எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Previous article

Recommended For You

About the Author: Editor Elukainews