யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட அம்பகாமம் கிராம மக்கள் நீண்டகாலம் எதிர்நோக்கி வந்த பாதுகாப்பான குடிநீர் இன்மையை நிவர்த்தி செய்வதற்க்காக ரூபா 78000/- பெறிமதியில் குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டு மக்கள் பாதுகாப்பான குடிநீரை பெறுவதற்க்காக அம்பகாமம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த. பாதுகாப்பான குடிநீர் தொகுதி பொருத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு அம்பகாமம் துர்க்கா மகளீர் அமைப்பு தலைவி தலைமையில் இடம் பெற்றுள்ளதும
இதனை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுனாமியின்
பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்ததுடன் மக்களிடம் கையளித்தார். இந்நிகழ்வில் அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர், கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகத்தினர், கிராம மக்கள் மற்றும் ஆச்சிரம தொண்டர்கள் என பலரும் கபந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்று காலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது.
இதில் “ஆறுமுகமான பொருள் “ எனும் ஆன்மீகத் தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவினை
அ.அமுதாஸ் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி அன்ன சத்திரம் மோகனதாஸ் சுனாமிகள் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், தொண்டர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் என பலரும் கபந்துகொண்டனர்.