
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறிமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடாத்தியிருந்ததுடன் நில அளவை செய்வதற்கும் பல தடவைகள முயற்சிக்கப்பட்டிருந்தது.
இந்திலையில் அனுர அரசாங்கம் பொறுப்பேற்று சில மணி நேரங்களில் இவ் உத்தரவு இராணுவ தலமையகத்தால் விடுக்கப்பட்டுள்ளது.