
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் வட மாகாண மர நடுகை மாதத்தின் முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டம்
அக்கராயனில் கரித்தாஸ் குடியிருப்பு மக்களுக்கு மரக்கன்றுகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.





தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் உ.நிறோஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த. யுகேஸ் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை வழங்கிவைத்துள்ளனர்