
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கோரிக்கைக்கமைவாக
பாடசாலை வரவு குறைந்த பிள்ளைகளின் வரவை மேம்படுத்துவதற்காகவும், போக்குவரத்து வசதியை இலகுபடுத்துவதற்காகவும், மாதந்தம் வவனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கும் போக்குவரத்து சேவைக்கான கார்த்திகை மாத வாகன கொடுப்பனவு ரூபா 85,650 வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.








இதே வேளை வவுனியா, கல்மடு பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தினரின் 61 மூத்தோரை கௌரவிப்பதற்க்காக
ரூபா 170,000 பெறுமதியான உடைகள் மற்றும் ரூபா 30,000 நிதியும் வழங்கிவைக்கப்பட்டது.
இவ் உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.