
யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் அமரர் சரசரட்ணம் புலந்திரலிங்கம் ஞாபகார்த்தமாக அவரது கணவர் திருவாளர் கந்தையா புலந்திரலிங்கம் அவர்களால் ரூபா 40 இலட்சம் பெறுமதியில் கட்டிக் கொடுக்கப்பட்ட தியான மண்டப திறப்பு விழா நிகழ்வு கல்லூரி அதிபர் செல்வி. இ. சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் நேற்று 21/11/2024 வியாழக்கிழமை காலை 9 30 மணியளவில் ஆரம்பமானது.
இதில் முதல் நிகழ்வாக ஆலயத்தில் இருந்து சுவாமி படங்கள் தியான மண்டபம் வரை எடுத்து வரப்பட்டு தியான மண்டப திறப்பு விழா இடம் பெற்றது.









தியான மண்டபத்தினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலநிதி தம்பாபிள்ளை குகதாஸ், வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் சத்தியபாலன், கட்டட நிதி நன்கொடையாளர் கந்தையா புலந்திரலிங்கம் ஆகியோர் இணைந்து சந்பிர்தாய பூர்வமாக நாடாவை வெட்டி திறந்து வைத்ததனை தொடர்ந்து சுவாமி படங்கள் மண்டபத்தில் வைக்கப்பட்டு சைவ சமய கிரியைகள் இடம் பெற்றதன் தொடர்ந்து பால் காச்சல் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து கல்வெட்டு பிரதம சிறப்பு விருந்தினர்களால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
தொடர்பு அரங்கில் கலை நிகழ்வுகள், பிரதம, சிறப்பு கௌரவ விருந்தினர்கள் உரைகள் இடம் பெற்றன.
தொடர்ந்து பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர் ஆகியோரும் தியான மண்டப கொடையாளர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இதில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் தம்பாப்பிள்ளை குகதாஸ், சிறப்பு விருந்தினராக வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் சத்தியபாலன், கௌரவ விருந்தினர்களாக கல்லூரி பழைய மாணவர் சங்க செயலாளர் திருமதி செல்வநாயகி, கல்லூரி அபிவிருத்தி சங்க செயலாளர் தயானந்தராசா, ஆகியோரும், கல்லூரி மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஓய்வு பெற்ற அதிபர்கள், உட்பட பலரும் கபந்துகொண்டு சிறப்பித்தனர்.