
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் தற்போது மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சங்கிலியன் தோப்பு, நல்லூர் கிராம சேவையாளர் பிரிவு J/109 பகுதிகளை சேர்ந்த 77 குடும்பங்களுக்கு 385,000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உணவுப்பொருட்கள் நேற்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டது.


நல்லூர் சாமந்திப் பூ மகளீர் சுய உதவிக் குழு தலைவர் க,விஜயலோயினி தலைமையில் வேல்முருகன் சனசமூக நிலையத்தில்
இடம் பெற்ற இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் கபந்துகொண்டு உலர் உணவு பொதுகளை வழங்கிவைத்தார். அத்துடன் பிரதேச கிராம சேவையாளர் திரு.N.ஜெயவந்தன் அவர்களும் கலந்து கொண்டார்.




