
*_꧁. கார்த்திகை: 𝟭𝟰
꧂_*
*_ வெள்ளிக்கிழமை_
*
*_ 𝟮𝟵•𝟭𝟭•𝟮𝟬𝟮𝟰
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். மற்றவர் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படுவீர்கள். தவறிப்போன சில பொருட்களைப் பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். அரசுப் பணிகளில் ஆதரவுகள் மேம்படும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
அஸ்வினி : மதிப்பளித்துச் செயல்படவும்.
பரணி : அறிமுகங்கள் உண்டாகும்.
கிருத்திகை : ஆதரவுகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் – ராசி:
_*
நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். சில புதுமையான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று,வரவுகள் உயரும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
கிருத்திகை : வேறுபாடுகள் குறையும்.
ரோகிணி : தீர்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : வரவுகள் உயரும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம்- ராசி:
_*
பூர்விக சொத்துக்களில் சில மாற்றம் செய்வீர்கள். மற்றவர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளில் தெளிவான முடிவுகள் பிறக்கும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபார ரீதியான புதிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.
மிருகசீரிஷம் : ஆதாயம் ஏற்படும்.
திருவாதிரை : புரிதல் உண்டாகும்.
புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் – ராசி:
_*
நண்பர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை ஏற்படும். கூட்டாளிகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
புனர்பூசம் : நம்பிக்கை உண்டாகும்.
பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.
ஆயில்யம் : ஆர்வம் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் – ராசி:
_*
திட்டமிட்ட பணிகள் ஈடேறும். மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். குறுகிய தூரப் பயணங்கள் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். விற்பனை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
மகம் : பணிகள் ஈடேறும்.
பூரம் : முயற்சிகள் மேம்படும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி – ராசி:
_*
கணவன், மனைவி மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் உண்டாகும். தன வரவுகள் மேம்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சிந்தனைப் போக்கில் உற்சாகம் தோன்றும். தம்பதிகளுக்குள் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரப் பணிகளில் லாபகரமான சூழ்நிலை உருவாகும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் காணப்படும். குழப்பங்கள் நீங்கி புதிய பாதையும் தெளிவும் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
உத்திரம் : வரவுகள் மேம்படும்.
அஸ்தம் : உற்சாகம் தோன்றும்.
சித்திரை : தெளிவுகள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் – ராசி:
_*
குழப்பமான சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் அலைச்சல் உண்டாகும். சாதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
சித்திரை : தாமதம் ஏற்படும்.
சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.
விசாகம் : அலைச்சல் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம் – ராசி:
_*
உலக நிகழ்வுகள் மூலம் மாற்றம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். உறவினர்களுடன் சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். தவறிப் போன சில பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
விசாகம் : மாற்றம் ஏற்படும்.
அனுஷம் : சேமிப்புகள் குறையும்.
கேட்டை : கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு – ராசி:
_*
வியாபாரப் பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். சிற்பப் பணிகளில் கவனம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
மூலம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
பூராடம் : மாற்றம் உண்டாகும்
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் – ராசி:
_*
வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகள் பற்றிய சில புரிதல்கள் ஏற்படும். சேவைத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். உடற்பயிற்சி விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நேர்மைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். குறுந்தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
உத்திராடம் : புரிதல்கள் உண்டாகும்
திருவோணம் : மாற்றங்கள் ஏற்படும்.
அவிட்டம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் – ராசி:
_*
வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபார நிலுவை பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். குடும்பத்தாரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இணையம் தொடர்பான துறைகளில் புதிய அறிமுகங்கள் உருவாகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்..
அவிட்டம் : அனுபவங்கள் கிடைக்கும்.
சதயம் : அங்கீகாரங்கள் கிடைக்கும்.
பூரட்டாதி : அறிமுகங்கள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் – ராசி:
_*
கொடுக்கல் வாங்கலில் பொறுமை வேண்டும். மனதில் இருக்கக்கூடிய விஷயங்களை வெளிப்படுத்துவதில் சிந்தித்துச் செயல்படவும். தந்தை வழி உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
ரேவதி : அலைச்சல்கள் உண்டாகும்.
*┈┉┅━•• ••━┅┉┈*