யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது.
தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலே குறித்த பாலம் முழுமையாக உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது. நேற்றைய தினம் பகுதியளவில் குறித்த பாலம் சேதமடைந்துள்ளது. தற்போது கனரக வாகனங்கள் செல்வது தவிரக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரதான பாதையாக ஏ 9 வீதிக்கு செல்கின்ற பாதையிலே குறித்த பாலம் அமைந்துள்ளது. இதனால்
போக்குவரத்து முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பாதை ஊடாக அதிக எடை கொண்ட பொருட்கள் கொண்டுவந்தமையினாலேயே இப் பாலம் உடையக்கூடிய நிலைக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது
இதேவேளை குறித்த பாலத்தை மீன்பிடி அமைச்சர் சந்திரசேகர் நேரடியாக நேற்றைய தினம் பார்வையிட்டார்.