
தென்மராட்சியில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 400 சமைத்த உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அவுஸ்ரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் தாயகம் வானொலி சேவையின் நிதி பங்களிப்பில் சாவகச்சேரி நகர இளைஞர்களின் ஒத்துழைப்போடும் குறித்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.




இதன்போது நகர இளைஞர்கள் ஒன்றிணைந்து சமைத்த உணவினை தயாரித்து தனித்தனி பொதிகளாக்கி கிராம சேவகர்களின் பட்டியலூடாக இந்த உணவுப்பதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி தென்மராட்சியில் நுணாவில் சரஸ்வதி வித்யாலயாலயம் 170, மதுவன் சனசமூக 22, கொடிகாமம் நாவலடி கிராமம் 60, கொடிகாமம் கொலனி சீயோன் தேவாலயம் 25, பாலாவி தெற்கு 30, அல்லாரை 20, சாவகச்சேரி 80 ஆகிய நலன்புரி நிலையங்கள் மற்றும் உறவினர், அயலவர் வீடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மதிய உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.