நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு…!

நள்ளிரவு (01) முதல் அமுலாகும்
வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன. 92 ஒக்ரேய்ன் பெற்றோல் விலை  குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பெற்றோல் 95, சுப்பர் டீசல் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

92 ஒக்ரெய்ன் பெற்றோல்  ரூ. 2 இனால் குறைப்பு – ரூ. 311 இலிருந்து ரூ. 309
ஒட்டோ டீசல்: ரூ. 3 இனால் அதிகரிப்பு – ரூ. 283 இலிருந்து ரூ. 286, மண்ணெண்ணெய்: ரூ. 5 இனால் அதிகரிப்பு – ரூ. 183 இலிருந்து ரூ. 188
பெற்றோல் 95: விலையில் மாற்றமில்லை – ரூ. 371
சுப்பர் டீசல்: விலையில் மாற்றமில்லை – ரூ. 313

இதேவேளை, SINOPEC நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews