இரசாயன உரத்தை விநியோகிக்கக் கோரியும், அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நுவரெலியா விவசாய சங்கங்களும் பௌத்த குருமார்களும் இணைந்து, நுவரெலியா தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று (17) பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டதுடன் எதிப்பு பேரணியையும் முன்னெடுத்தனர்
.
இதன்போது விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்தவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. உர தட்டுப்பாடு காரணமாக விவசாயத்தை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்ட காரர்கள், அத்தியவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பால் நுவரெலியா மக்கள் மட்டுமல்ல நாட்டு மக்களே பாதிப்படைந்துள்ளதாகவும் கோசம் எழுப்பினர்
பின்னர் நகரின் பிரதான வீதியூடாக எதிர்ப்பு பேரணியை ஆர்பாட்டக்காரர்கள் முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நுவரெலியா நகர வர்த்தகர்களும் இரண்டு மணித்தியாலங்கள் தங்களது வர்த்தக நிலையங்களை மூடியிருந்தனர்.