
யாழ்ப்பாணம் வதயமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் Fengal புயல் மற்றும் வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் பழம்பாசி, கரடிப்பிலவு, 17ம் கட்டை, மாமடுச் சந்தி, பெரிய இத்திமடு, தட்டாமலை, தண்டுவான் ஆகிய கிராமங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 65 குடும்பங்களுக்கு நேற்று புதன்கிழமை (04/12/2024) ரூபா
325,000 பெறுமதியான அத்தியவ உலர் உணவுப் பொருட்கள் மாமடுச் சந்தி கற்பகா அறநெறிப் பாடசாலையில் வைத்து வழங்கப்பட்டுள்ளன. இதனை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி அன்ன சத்திரம் மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்கள் சகிதம் நேரில் சென்று வழங்கிவைத்தார்.





இதேவேளை பருத்தித்துறை பிரதேச செயலத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக
50 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 125,000 ரூபா பெறுமதியான அத்தியவசிய உலர் உணவுப் பொருட்களும் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. இவ்வுதவிகளை சந்நிதியான் ஆச்சிரமத்தில் வைத்து வழங்கப்பட்டன.
கொடிகாமம், மீசாலை, விடத்தற்பளை ஆகிய பிரதேசங்களிலிருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு 400 சமைத்த உணவுப் பொதிகளும், கோண்டாவில் தென்கிழக்கு கிராமசேவை
யாளர் பிரிவை சேர்ந்த மக்களுக்கு யா/கோண்டாவில் சி/சி/த/க/ பாடசாலையி
ல் வைத்து 65 சமைத்த உணவுப் பொதிகள் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டன.