
வடமராட்சி தென் மேற்கு பிரதேச செயலகத்தின் கலாச்சார விழா 2024 மாலிசந்நி பிள்ளையார் ஆலய விழா மண்டபத்தில் உதவி பிரதேச செயலர் சிவகாமி உகாகாந்தன் தலமையில் பேராசிரியர் யோகராசா அரங்கில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2:15 மணியளவில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு அரங்கில் மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.














தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம் பெற்றதனை தொடரந்து வரவேற்புரையினை வடமராட்சி தென் மேற்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.மேகவண்ணன், நிகழ்த்தினார். தலமை உரையினை வடமராட்சி தென்மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் சிவகாமி உமாகாந்தன் நிகழ்த்தினார்.
அரங்க திறப்புரையை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் தருமராசா அஜந்தகுமார் நிகழ்த்தினார்
இதில் நிகழ்ச்சிகளாக குரசேத்திரா நடனாலய மாணவர்களின் வரவேற்பு நடனம், மயில் நடனம், குறத்திநடனம், என்பனவும், அமிர்த வாகினி இசைமன்ற மாணவர்களின் கிராமியப்பாடல், விக்னா இசை மன்ற மாணவர்களின் இசைக் கச்சேரி, பிரதேச கவிஞர்களின் கவியரங்கம், கலாசார மத்திய நிலைய மாணவர்களின் செம்பு நடனம், நவிண்டில் அறநெறி பாடசாலை மாணவர்களின் நாட்டுக்கூத்து என்பனவும் இடம் பெற்றன.
கருத்துரைகளை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட யாழ்மாவட்ட சிரேஸ்ர கலாசார உத்தியோகத்தர் சுகுணலினி விஜயரத்தினம், பிரதம விருந்தினராக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், உட்பட பலர் நிகழ்த்தினர்.
இதேவேளை கலைஞான வாருதி விருதுகள் ஆனந்தராணி நாகேந்திரன், ஆறுமுகம் சிவநாதன், கந்தப்பு ஜெயக்குமார், கதிரவேலு தனபாலசிங்கம், நாகரத்தினம் மகேந்திரன் ஆகியோருக்கு கலைஞான வருதி விருதும்,
பாலச்சந்திரன் நாகேந்திரன், தங்கவேல் பார்த்தீபன், நற்குணம் ரகுநாதன், தர்மலிங்கம் சிறிதரன், ஆகியோருக்கு கலை வாருதி விருதும்,
ஜெயசீலன் சுகன்யா, ஜீவரட்ணம் கௌரிசங்கர் ஆகியோருக்கு இளங்கலைஞர் விருதும் வழங்கிவைக்கப்பட்டன.
இதில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், சிறப்பு விருந்தினராக யாழ்மாவட்ட சிரேஸ்ர கலாசார உத்தியோகத்தர் சுகுணலினி விஜயரத்தினம், கௌரவ விருந்தினர்களாக மூத்த கலைஞர்களான கிருஸ்ணபிள்ளை நடராசா, திருவாட்டி தம்பு சரோஜா, மதகுருமார்கள், சிரேஸ்ர விரிவுரையாளர் வேல்நந்தன், வடமராட்சி தென்மேற்கு பிரதேச செயலக அதிகரிகள், பிரதேச கலைஞர்கள், அயல் பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச மக்கள் என பலரும் கபந்துகொண்டு சிறப்பித்தனர்.