
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான்
ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாரந்தம் இடம் பெறும் நிகழ்வு நேற்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம் பெற்றது.






இதில் ஆன்மீக அருளுரையினை,
“குருவாய் வருவாய் “ என்ற ஆன்மீகத் தலைப்பில் அதிபர் திருமதி. கவிதா லலீசன் அவர்கள் நிகழ்த்தினார்.
இதேவேளை செல்லர் வீதி, நல்லூரை சேர்ந்த ஶ்ரீ யமுனாம்பிகா சமேத சிவசங்கரனார் திருக்கோவில் (பூதவராயர்) ஆலய கட்டிட பணிக்காக 200,000 ரூபா நிதியும்,
மல்லாகம் தெற்கு மகளிர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக,
கிணறுகள் தூய்மைப்படுத்துவதற்காக 01 பரல் குளோரின் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் நிர்வாகிகள், தொண்டர்கள், என பலரும் கபந்துகொண்டு சிறப்பித்தனர்.