இறைவனடி சேர்ந்த சிவஸ்ரீ விஸ்வ நாராயண குருக்கள் அவர்களுக்கு இந்துக்குருமார் அமைப்பு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது.
.அவரது மறைவு குறித்து இந்துகுருமார் அமைப்பு தலைவர் சிவாகம கலாநிதி சிவஸ்ரீ. கு.வை.க. வைத்தீஸ்வரக்குருக்கள் மற்றும் அதன் செயலாளர் சிவஸ்ரீ. ச.சாந்தரூபக் குருக்கள் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பிய இரங்கல் செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முழுமையான விபரம் வருமாறு.
ஆத்ம சிவப்பிராப்த்திக்கு இறை பிரார்த்தனை செய்கின்றோம்.
நாராயண வாத்தியார் என நாம் எல்லோரும் அன்புடன் அழைத்து, பணியும் சிவஸ்ரீ விஸ்வ நாராயண குருக்கள் அவர்களின் தேகம் நீத்த செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைந்தோம்.
விப்ரசிரேஸ்டராக பல்வகை ஆளுமை மிக்கவராக, அன்புடன் அனைவரையும் அரவணைக்கும் பண்பாளராக திகழ்ந்தவர்.
கனடா, அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள சைவ ஆலயங்களில் நடைபெறும் பல்வேறு வகையான சிறப்பு கிரிகைகளில் பங்கேற்புடன், ஆலோசனைகளையும் வழங்கியவர்.
பல குருமார்களை உருவாக்கிய பெருமைக்கு உரியவர்.
அவரது இழப்பு மிகவும் கவலையை அளித்துள்ளது. அவரது ஆத்ம சிவப்பிராப்திக்கு இந்துக்குருமார் அமைப்பின் சார்பில் இறை பிரார்த்தனை செய்கின்றோம்.
அத்துடன் உறவுகளுக்கு எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம். ஓம் சாந்தி.
ஒப்பம்
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ. கு.வை.க. வைத்தீஸ்வரக்குருக்கள்
தலைவர், இந்துக்குருமார் அமைப்பு
சிவஸ்ரீ. ச.சாந்தரூபக் குருக்கள்
செயலாளர், இந்துக்குருமார் அமைப்பு.