பொன்னம்பலம் எம் பி பயணித்த வாகனம் விபத்து, பெண் பலி, சாரதி பிணையில் விடுதலை…!

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வாகனம்  விபத்துக்குள்ளானதாகவும், பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும்,  வென்னப்புவ பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதன் எழுபது வயதுடைய பெண் ஒருவரே மரணமடந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு புத்தளம் வீதியில் போலவத்த சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews