யாழ்ப்பாணத்தில் 20 இலட்சத்துக்கு அதிகமான நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

தளபாடங்களை தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் பெருமளவான நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர், 20 இலட்சத்து 32ஆயிரம் ரூபா பெறுமதியான தளபாடங்களை தருவதாகக் கூறி, வவுனியாவில் உள்ள நபர் ஒருவரை ஏமாற்றி பணத்தினை பெற்றுக் கொண்டுவிட்டு ஒரு மாதகாலமாக தலைமறைவாக இருந்துள்ளார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெய மஹா தலைமையின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  கோண்டாவில் பகுதியில் வைத்து பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews