காற்றழுத்த தாழ்வுப்பகுதி கொக்குத்தொடுவாய் – மாங்குளம் – இலுப்பைக்கடவை ஊடாக இராமேஸ்வரத்தை அடைய அதிக வாய்ப்பு…!

மாலை 6 மணியளவில் குச்சவெளிக்கு கிழக்காக 14 கடல்மைல் என்ற தரை நெருங்கு நிலையை எட்டியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுக்குன்றி கொக்குத்தொடுவாய் கடல்நீரேரி ஊடாக தரைமேற்பரப்பை இன்று இரவு 8 மணியாகும்போது நெருங்கி அதன் ஊடாக தமிழக தரைப்பகுதிக்குள் நுழைந்து அரபிக்கடலில் நாளை (12) செயலிழக்க வாய்ப்புள்ளது.

கரை கடந்து வெளியேறும்போது கிழக்கு மாகாணத்திலும் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும் லேசான மழை நாளை(12) பதிவாகும்.

தமிழகத்தில் தென்தமிழக, டெல்ரா மாவட்டங்களில் கனமழை கரையோரப்பகுதி ஊடாக இன்று(11) இரவிலிருந்து கிடைக்க ஆரம்பிக்கவுள்ளது.

Vkm Sasikumar

Recommended For You

About the Author: Editor Elukainews