பருத்தித்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி  மாத நிகழ்வும், பண்பாட்டு விழாவும் 2024…!

பருத்தித்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி  மாத நிகழ்வும்,  பண்பாட்டு விழாவும் நேற்று முன்தினம் 11/12/2024  காலை 9:30 மணியளவில் பருத்தித்துறை தனியார் விருந்தினர் விடுதியில் பருத்தித்துறை பிரதேச சபை செலயாளர் அருணகிரி வினோராஜ் தலமையில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு அரங்கில் மங்கல  சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதில் மங்கல சுடர்களை புற்றளை சுந்தர்ராஜ குருக்கள், சுப்பர்மடம் பங்குத்தந்தை, நிகழ்வின் பிரதம விருந்தினரும் வடக்கு மாகாண ஆளுநருமான நாகலிங்கம் வேதநாயகம், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் , பொன்னம்பலம் சிறிவர்ணன், வரவேற்பு நடனம், வரவேற்பு உரை என்பன இடம் பெற்றன. தொடர்ந்து உள்ளூராட்சி மாதத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களும்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் சிறப்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து பருத்தித்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரிவுகளில் சாதனைபடைத்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபை ஊழியர்கள், உள்ளூராட்ச
 மாத போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள், பெற்றோர்கள், கலைஞர்கள் என பலரும் கபந்துகொண்டு சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews