
*_꧁. மார்கழி: 𝟬𝟴
꧂_*
*_ திங்கள் -கிழமை_
*
*_ 𝟮𝟯•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். போட்டி, பந்தயங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணம் தொடர்பான விஷயங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தொழில் சார்ந்த உதவிகள் மற்றும் லாபங்கள் மேம்படும். பழைய நினைவுகள் மூலம் ஒருவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
அஸ்வினி : முடிவுகள் பிறக்கும்.
பரணி : அனுபவம் கிடைக்கும்.
கிருத்திகை : சோர்வுகள் நீங்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் – ராசி:
_*
செல்வச் சேர்க்கைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகப் பணிகளில் கவனம் வேண்டும். யூக வணிகத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் நினைத்த காரியங்கள் கைகூடி வரும். மறைமுகமான சில விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்.
கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ரோகிணி : விவேகத்துடன் செயல்படவும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம்- ராசி:
_*
கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். வாகனம் தொடர்பான பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
மிருகசீரிஷம் : புரிதல் ஏற்படும்.
திருவாதிரை : ஆதாயம் உண்டாகும்.
புனர்பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் – ராசி:
_*
போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். காதணிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் – ராசி:
_*
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். இலக்கிய பணிகளில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் குறையும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். சிந்தனைகளில் சில மாற்றம் ஏற்படும். பேச்சுக்களால் ஆதாயம் அடைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்.
மகம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
பூரம் : இன்னல்கள் குறையும்.
உத்திரம் : கலகலப்பு உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி – ராசி:
_*
உடன் பிறந்தவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் சுதந்திரப் போக்கு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். நேர்மறை சிந்தனைகளால் தெளிவுகள் பிறக்கும். சுகம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அஸ்தம் : பயணங்கள் கைகூடும்.
சித்திரை : தெளிவுகள் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் – ராசி:
_*
எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். திடீர் பயணங்கள் மூலம் அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். எண்ணிய சில காரியம் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். பொறுமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
சித்திரை : நெருக்கடிகள் உண்டாகும்.
சுவாதி : பிரச்சனை நீங்கும்.
விசாகம் : தாமதம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம் – ராசி:
_*
சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சமுகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான சில செயல்களை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்பு பணிகளில் லாபம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்புப் நிறம்.
விசாகம் : அனுகூலம் உண்டாகும்.
அனுஷம் : அறிமுகம் கிடைக்கும்.
கேட்டை : லாபம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு – ராசி:
_*
எதிலும் திருப்தி அற்ற மனநிலை உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பொறுமையுடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார பணிகளில் திறமையுடன் செயல்படுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திராடம் : திறமை வெளிப்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் – ராசி:
_*
வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். சர்வதேச வணிகத்தில் முயற்சிக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
உத்திராடம் : வாய்ப்புகள் கைகூடும்.
திருவோணம் : மாற்றம் உண்டாகும்.
அவிட்டம் : தேடல் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் – ராசி:
_*
ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புதிய இடத்திற்கு செல்வதற்கான சூழல்கள் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் அலைச்சல் ஏற்படும். இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சதயம் : புரிதல் ஏற்படும்.
பூரட்டாதி : குழப்பம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் – ராசி:
_*
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். இடுப்பு வலி சார்ந்த பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். மனதளவில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.
ரேவதி : ஒப்பந்தங்கள் கைகூடும்.
*┈┉┅━•• ••━┅┉┈*