ஆழிப்பேரலை எனும் கடல்கோளால் காவு கொள்ளப்பட்ட 20 வது ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்
26/12/2004 அன்று உலகின் தென்கிழக்கு ஆசிய நாடுகள் 13 ஐ சுனாமி என்கின்ற ஆழிப்பேரலை மிகமிக மோசமாக தாக்கியது.
இந்தோனேசியாவில் சுமத்திராதீவில் உருவாகிய பூமி அதிர்வு ஆழிப்லேரலையாக மாறி சுற்றியுள்ள நாடுகளைத்தாக்கியதுடன் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களிலும் உள்ள 15கரையோரமாவட்டங்களில் 11 மாவட்டங்களை நேரடியாகவும் 1மாவட்டம்(கிளிநொச்சி) மறைமுகமாகவும் தாக்கி 26777. மனித உயிர்கள் காவுகொண்டது.
இலங்கையில் உள்ள 9மாகாணங்களில் 4 மாகாணங்களில் இதன் தாக்கம் இருந்தது .
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களே அதிகமான உயிரிழப்புக்களையும் சொந்தழிவுகளையும் சந்தித்தது.
குறிப்பாக வடக்கு கிழக்கில் 17200 பேர் உயிரழந்தும் 30ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்தும் இருந்தனர்.
அந்தவகையில் இலங்கையில் அதிகளவான மக்கள் உயிரிழந்த மாவட்டமாக அம்பாறை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 9051 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் நாவலடி என்னும் ஒருகிராமம் முற்றக கடலில்மூழ்கி இல்லாமல்போயுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2975பேர் உயிரிழந்தனர், திருகோணமலை மாவட்டம் உயர்ந்த நிலப்பிரதேசமாகையினால் அந்தமாவட்டத்தில் உயிரிழப்பானது சற்றுக்குறைவாகக்காணப்படுகின் றது. திருகோணமலை மாவட்டத்தில் 984பேர் உயிரிழந்தனர்.
முல்லைத்தீவுமாவட்டமும் அதிகளவான உயிரிழப்புக்களை சந்தித்திருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 2902 பேர் உயிரிழந்தனர்.
கிளிநொச்சிமாவட்டம் ஆழிப்பேரலையில் நேரடியாகப்பாதிக்கப்படவில்லை எனினும் மறைமுகமாக அதாவது தொழில் நிமிர்த்தமும் உறவினர்களின் வீடுகளில் முல்லைத்தீவுக்கும் யாழ்ப்பாணத்தின் வடமராட்சிகிழக்குப் பிரதேசங்களுக்கும் சென்றிருந்தவர்களில் 32 பேர் உயிரிழந்திருந்தனர் யாழ்ப்பாணமாவட்டத்தில் ஆழிப்பேரலையினால் (சுனாமி) மருதங்கேணி(வடமராட்சிகிழக்கு) பிரதேசசெயலக பிரிவு மட்டுமே முற்றகா பாதிக்கப்பட்டது.
சுண்டிக்குளம் தொடக்கம் மணற்காடுவரையான கரையோரப்பிரதேசம் முழுவது அழிவடைந்தது. யாழ்ப்பாணமாவட்டத்தில் 1256 பேர் உயிரிழந்தனர்.
இதில் 1250பேர் வடமராட்சிகிழக்கைச்சேர்ந்தவர் கள் ஆவர். 6 பேர் மட்டும்தான். மற்றைய பிரதேசங்களைச்சேர்ந்தோர் ஆழிப்பேரலையின்தாக்கம் யாழ்ப்பாணம் கீரிமலைவரைக்கும் இருந்ததுள்ளது பருத்தித்துறைதொடக்கம் கீரிமலைவரையான கடல்ப்பகுதியானது பார் (கல்லுகள்) நிறைந்த கடல் என்பதாலும் கரையிலும் தடுப்பு சுவர்கள் உள்ள பகுதி என்பதாலும் அங்கு தாக்கம் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆழிப்பேரலையினால் 4500பேர் உயிரிழந்தனர். காலிமாவட்டத்தில் ஆழிப்பேரலையினால் 3774பேர் உயிரிழந்தனர். மாத்தறைமாவட்டத்தில் ஆழிப்பேரலையினால் 1061பேர் உயிரிழந்தனர்.
களுத்துறைமாவட்டத்தில் ஆழிப்பேரலையினால் 170பேர் உயிரிழந்தனர். மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் ஆழிப்பேரலையினால் 65பேர் உயிரிழந்தனர். கம்பஹா(நீர்கொழும்பு) மாவட்டத்தில் ஆழிப்பேரலையினால் 07பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேஷியா சுமத்தீரதீவில் 26/12/2004 காலை 6.58மணிக்கு உருவாகிய ஆழிப்பேரலை இலங்கையின் அம்பாறை கரையை காலை 8.30 மணிக்கு தாக்கியது. அலையின் உயரம் 7.12 மீற்றரும், மட்டக்களப்பில் காலை 8.40 மணிக்கு கரையை அலையின் உயரம் 6.10 மீற்றரும், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காலை 8.50 மணிக்கு கரையை தாக்கிய அலையின் உயரம் 5.8 மீற்றரும், யாழ்ப்பாணத்தில் காலை 9.00மணிக்கு கரையை தாக்கிய அலையின் உயரம் 3.5 மீற்றரும், அம்பாந்தோட்டையில் காலை 8.50மணிக்கு கரையை தொட்டது அலையின் உயரம் 7.9 மீற்றரும், மாத்தறையில் காலை 9.00மணிக்கு கரையை தொட்டது. அலையின் உயரம் 7.9 மீற்றும், காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் காலை 9.15மணிக்கு கரையை தொட்டது. அலையின் உயரம் 4.9 மீற்றரும், கொழும்புமாவட்டத்தில் காலை 9.20 மணிக்கு கரையை தொட்டது அலையின் உயரம் 4.5 மீற்றரும், கம்பஹா(நீர்கொழும்பு) மாவட்டத்தில் காலை 9.30மணிக்கு கரையை தொட்டது அலையின் உயரம் 2 மீற்றருமாக காணப்பட்டன.
இவ் ஆழிப்பேரவையால் உயிரிழந்தவர்களது உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்கள்.