யாழ்ப்பாணத்தில் ஆபத்தான சாரத்தியம் – கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்பு!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வழித்தடத்தில் இன்று (28.12.2024), தனியார் பேருந்து ஒன்று சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவலாக காணொளிகள் பகிரப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறான சாரத்தியத்துக்கு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, வடக்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் க.மகேஸ்வரனை வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். அதற்கு அமைவாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews