இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை, பேச்சுவார்த்தை ஏப்போதோ நிறைவு, 2016 ம் ஆண்டு தீர்மானதை நடைமுறை படுத்தினால் பிரச்சினைக்கு தீர்வு…!நா.வர்ணகுலசிங்கம்.(வீடியோ)

இலங்கையிலிருந்து இந்திய தமிழகம் சென்றுள்ள இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகஹகீம் அவர்கள் இந்நியாலிற்று சென்றுள்ள நிலையில் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்தியா இலங்கை மீனவர்களில் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 இது தொடர்பாக  வடமராட்சியில் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவித்த வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச உப தலைவர் நா வர்ணகுலசிங்கம் இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இலங்கை இந்திய மீனவர்கள் பேசி 2016 ம் ஆண்டு ஒரு தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும், அந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தினாலே  இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும் என்றும் தெரிவுத்ததுடன் நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்சுனா யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர் பிரதிநிதிகள் என்று சிலரை சந்தித்ததாகவும், அவர்கள் அனைவரும் உண்மையான மீனவர்கள் இல்லை என்றும் அவர்கள் கடந்த அரசு காலத்தில் ஆளும் கட்சியினரால் தமக்கு வேண்டியவர்களையும், தமது கட்சி உறுப்பினர்களையுமே அப் பதவிகளுக்கு நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews