தமிழரசு கட்சி சிதைப்பு, சுமந்திரன் தொடர்பில் பரபரப்பு குற்றசாட்டு, அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் அதிரடி கருத்து..! (வீடியோ)

தமிழரசு கட்சி சிதைந்ததாலும், அழிந்தாலும் பரவாயில்லை, கட்சி தனது கட்டுப்பாட்டில் இருகக வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அலுவலகத்தில் நேற்று 31/12/2024 செவ்வாய்கிழமை  நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுமந்திரனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன்.
தமிழரசு கட்சியின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் மாவை சேனாதிராசா தான் என சாணக்கியன் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்கள்
மாவை சேனாதிராசாவில் விமர்சனங்கள் இருக்கின்றன என்பது உண்மை,  ஆனால் இந்த போக்குகள்  எல்லாவற்றிற்கும்  மூல காரணம் சுமந்திரன் தான் என்பது இன்றைக்கு வெட்டை வெளிச்சமான உண்மையாகும்.
இதிலே தமிழரசு கட்சி என்பது ஒரு பாரம்பரிய கட்சி, அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது, அதற்கு வடக்கு கிழக்கு கட்டமைப்பு இருக்கிறது.
அது பலவீனப்பட்டு செல்வது தமிழ் அரசியலை பலவீனப்படுத்துவது தமிழ் அரசியலை பலவீனப்படுத்தும் ஒரு செயலாகும்.
ஆகவே தமிழரசு கட்சியை பாதுகாக்கின்ற நடவடிக்கையை கட்சிக்காரர்கள் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.
ஆகவே வெளியிலிருந்து மக்கள் ஒரு பலமான அழுத்தத்தை கொடுப்பதன் ஊடகவே இதனை முன்நேற்றமுடியுமென நான் கருதுகின்றேன்.
அதிலிருந்து நாம் தவறுவோமாகவிருந்தால் நாம் ஒரு குறுகிய காலத்திலேயே இலங்கை தமிழரசு கட்சி வடக்கிலே இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகக்கூடி ஒரு சூழல் வரலாம் என்பதே எனது நிலைப்பாடு.
இந்தப் போக்கை தமிழ் மக்கள் அனுமதிக்கப்போகிறார்களா என்பதுதான் எனது கேள்வி.
இதில் தெளிவாகத் தெரிகின்ற ஒரு விடயம் இது ஒரு கொள்கைப் பிரச்சினை.
தமிழரசு கட்சியும் தமிழ் தேசிய அரசியலும்  இதுவரை பின்பற்றிய அரசியலை கைவிட்டு இன்னோர் அரசியலை கொண்டு செல்வதற்க்காக குறிப்பாக இறமை அரசியலை கைவிட்டு ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில் ஒரு அரசியலை கொண்டு செல்வதற்க்கும்,  இணக்க அரசியலை கொண்டு செல்வதற்க்காகவும் சுமந்திரன் இந்த வேலையை செய்கிறார்.
இந்த பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும் ஏன்பதே எனது நிலைப்பாடாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews