பிரதேச செயலக ரீதியாக உதவி தேவைப்படும் மக்களை இனங்கண்டு தேடிச் சென்று அவர்கள் பிரச்சினைகளை அறிந்து அதற்குரிய தீர்வுகளை வழங்கக்கூடிய உச்ச கட்ட செயற்பாடுகளை முன்னடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் (01.01.2024) நடைபெற்ற
“Clean Sri Lanka” நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் உத்தியோகத்தர்கள் இணைந்து கொண்ட நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“Clean Sri Lanka” நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து
கடந்த 2024 ஆம் ஆண்டு அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்யத்தக்க வகையிலே செயற்பட்டதற்கு நன்றியினை தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் மலர்ந்திருக்கும் இனிய புதுவருடமானது அனைவருக்கம் சுபீட்சமாகவம் சந்தோசமாகவும் அமைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேலும் இவ்வாண்டு பிரதேச செயலக ரீதியாக உதவி தேவைப்படும் மக்களை இனங்கண்டு தேடிச் சென்று அவர்கள் பிரச்சினைகளை அறிந்து அதற்குரிய தீர்வுகளை வழங்கக்கூடிய உச்ச கட்ட செயற்பாடுகளை முன்னடுக்கவுள்ளதாகவும், இதற்கு அரச உத்தியோகத்தர்களாகிய உங்கள் ஒவ்வொருவரது ஒத்துழைப்பும், பங்களிப்பும் தேவைப்படுவதாகவும் இதன் மூலம் மக்களின் தேவைகளை அறிவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், அபிவிருத்தி சார்ந்த திட்டங்களை எமது மாவட்டத்தில் முன்னெடுக்கும் போது ஈடுகொடுக்கக் கூடியதாகவும், பயனுறுதி வாய்ந்தாகவும், மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவும், வகுக்கப்பட்டு முன் தயார் படுத்தலுடன் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெற்றியடைய முடியும் எனவும், மக்களின் முறைப்பாடுகளை தனி ஒருவராலோ அல்லது ஒரு திணைக்களத்தினாலோ பூர்த்தி செய்ய முடியாது மாறாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செற்படும் போது பயனைப் பெற்றக்கொள்ள முடியும் எனவும்,
மலர்ந்திருக்கும் 2025 ஆம் ஆண்டு முன்னெடுக்கவுள்ள செயற்றிட்டங்களில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து வினைத் திறனாகவும், விளைத்திறனாகவும் மாவட்ட மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதாக இன்று உறுதி மொழியை எடுத்துள்ளோம் எனவும், இதற்கிணங்க Clean Sri Lanka செயற்திட்டத்தின் நோக்கமாக ‘ஒரு வளமான நாடு அழகான வாழ்க்கைக்கு’ என்ற அடிப்படையில் நாம் அனைவரும் இந்த செயற்றிட்டத்தை மாவட்டத்தில் முன்னெடுப்பதற்கு திடசங்கற்ப்பம் பூணவேண்டும் எனத் தெரிவித்தார்.
அரசசேவை உத்தியோகத்தர்களாகிய நாம் எமது செயற்பாடுகளை சரியான திட்டமிடலுடன் கூடிய முன்னெடுப்புக்களை மேற்கொள்வதன் மூலம் மாவட்ட மக்களுடைய சமூக, பொருளாதார, கல்வி, கலாசார, பண்பாட்டு, அபிவிருத்திசார் திட்டங்களில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் மாவட்ட மக்கள் சுபீட்சமாகவும் சந்தோசமாகவும் தங்களுடைய வாழ்க்கையை மலரச்செய்வதற்கான பங்களிப்பை நாம் வழங்க வேண்டும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், Clean Sri Lanka செயற்றிட்டமானது முன்மாதிரியாக செயற்படல், ஊக்கமளித்தல் ஈடுகொடுத்தால் ஊடாக சமூக ஒன்றின் நடைமுறையிலான மாற்றங்களை ஏற்படுத்தும் பலமான அணுகுமுறை ஒன்றை அடையக்கூடியதாக இருக்கும் இதன் மூலம் ஒருநாட்டின் சமூக, பொருளாதார கலாசார, நெறிமுறைகள் மற்றும் சுற்றாடல் ரீதியான முன்னோக்கிச்செல்லும் நிகழ்ச்சி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துதல் வேண்டும் எனவும்,
தேசிய ரீதியில் இவ்வாறான தொரு நிகழ்ச்சி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தும் தேவை அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. இந் நிகழ்ச்சி திட்டத்துடன் இணைந்து இன மத பேதமின்றி அரச உத்தியோகத்தர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட மக்கள் திருப்தியடையக்கூடிய வகையில் அர்ப்பணிப்பாக செற்பட வேண்டும். எனவும்,
மாவட்ட மக்கள் அனுபவித்த கடந்த கால இன்னல்களை கருத்தில் கொண்டு அனுசரித்து திருப்திகரமாக சேவையாற்ற வேண்டும் எனவும் இயலுமான வகையில் மக்களின் கோரிக்கைகளை அணுகக்கூடிய வகையில் அரச சேவை பொறிமுறையினை மாற்றியமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.