காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான படகு சேவை நாளை இடம்பெறாது!

காங்கேசன்துறைக்கும் – நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளையதினம் இடம்பெறாது என குறித்த கப்பல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காலநிலை சீரின்மை காரணமாக காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் நாளையதினம் பயணிகள் கப்பல் சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் காலநிலை சீரின்மை காரணமாக நாளையதினம் கப்பல் சேவை இடம்பெறாது என்றும், எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதியே பயணிகள் கப்பல் சேவை இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews