ஊடகவியலாளர் குமணனின் தந்தையின் இறுதிக் கிரியைகள் நாளை

போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மண்ணின் முன்னணி தமிழ் ஊடகவியலாளரின் அன்புத் தந்தை காலமானார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும், புகைப்பட ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணனின் தந்தை செல்லப்பா கனபதிப்பிள்ளை நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்த நிலையில் 2025 ஜனவரி முதலாம் திகதி காலமானார்.

முன்னாள் கால்நடை அபிவிருத்தி தொழில்நுட்ப நிபுணரான இவர் ஐந்து மகன்கள் மற்றும் ஒரு மகளின் தந்தை ஆவார்.

சடலம் தற்போது குமுளமுனை, முள்ளியவளையிலுள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கணபதிப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு குமுளமுனை தாமரைக்கேணி இந்து மயானத்தில் நடைபெறும்.

ஊடகவியலாளர் குமணன், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கின் மனித உரிமை மீறல்கள் உட்பட குற்றங்கள் மற்றும் ஊழல் மோசடிகளை புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் மூலம் வெளிக்கொணர்ந்து சர்வதேச கவனத்தை ஈர்த்தவராவார்.

Recommended For You

About the Author: Editor Elukainews