
*_꧁. மார்கழி: 𝟭𝟵
꧂_*
*_ வெள்ளிக்கிழமை_
*
*_ 𝟬𝟯•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
வழக்குப் பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். புதிய வேலை நிமித்தமான எண்ணங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சகோதரர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்.
அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : அனுபவம் உண்டாகும்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் – ராசி:
_*
நிதானமான அணுகுமுறைகள் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் துரிதமாகச் செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பயணம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் விவேகத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் விலகும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
கிருத்திகை : மாற்றமான நாள்.
ரோகிணி : சிந்தனைகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : இன்னல்கள் விலகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம்- ராசி:
_*
மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும். எதிர்பார்த்த தனம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் திட்டமிட்டு செயல்படவும். உணவு தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். வெளிப்படையான பேச்சுக்களால் நெருக்கடிகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
மிருகசீரிஷம் : தாமதம் உண்டாகும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் – ராசி:
_*
எண்ணிய சில பணிகள் செய்வதில் காலதாமதம் உண்டாகும். எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். குழந்தைகள் வழியில் கவனம் வேண்டும். பொதுப் பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழல் உண்டாகும். நிர்வாகத் துறைகளில் விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கால்களில் வலிகள் ஏற்பட்டு நீங்கும். விவசாயப் பணிகளில் அலைச்சல் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்.
புனர்பூசம் : தாமதம் உண்டாகும்.
பூசம் : மாற்றமான நாள்.
ஆயில்யம் : அலைச்சல் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் – ராசி:
_*
உத்தியோக பணிகளில் திறமையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமுகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்.
மகம் : திறமைகள் வெளிப்படும்.
பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : திருப்பங்கள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி – ராசி:
_*
நெருக்கமானவர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். இழுபறியான காரியங்கள் நிறைவு பெறும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். போட்டி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நற்செயல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
உத்திரம் : வித்தியாசமான நாள்.
அஸ்தம் : லாபகரமான நாள்.
சித்திரை : முடிவுகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் – ராசி:
_*
பலதரப்பட்ட சிந்தனைகளால் சோர்வு ஏற்படும். பணியிடத்தில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். உறவினர்களுடன் வெளியூர் சென்று வருவீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கால்நடைகளால் ஆதாயம் உண்டாகும். நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். தொல்லை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
சித்திரை : மாற்றமான நாள்.
சுவாதி : ஆதாயம் உண்டாகும்.
விசாகம் : செலவுகள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம் – ராசி:
_*
பொருளாதாரம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். பயணம் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆரோக்கியம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.
விசாகம் : சிந்தனைகள் மேம்படும்.
அனுஷம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
கேட்டை : வாதங்களை தவிர்க்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு – ராசி:
_*
புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும், நெருக்கமும் அதிகரிக்கும். அரசு விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். வியாபாரப் பணிகளில் அனுசரித்து நடந்துகொள்ளவும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
மூலம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் – ராசி:
_*
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்காலம் தொடர்பான சேமிப்புகள் மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சுபச்செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
உத்திராடம் : சேமிப்புகள் மேம்படும்.
திருவோணம் : தேடல்கள் பிறக்கும்.
அவிட்டம் : புரிதல் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் – ராசி:
_*
பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். தாய்மாமன் வழியில் ஆதாயம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கண்களில் எரிச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
அவிட்டம் : அனுபவம் வெளிப்படும்.
சதயம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
பூரட்டாதி : நெருக்கடிகள் மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் – ராசி:
_*
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். ரகசியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : பொறுப்புகள் குறையும்.
*┈┉┅━•• ••━┅┉┈*