இன்றைய ராசி பலன், மார்கழி 29, ஜனவரி 13/2025, திங்கட்கிழமை.

*_꧁‌. 🌈 மார்கழி: 𝟮𝟵 🇮🇳꧂_*
*_🌼 திங்கள் -கிழமை_ 🦜*
*_📆 𝟭𝟯•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
மாணவர்களுக்கு கல்விப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தைரியமான செயல்பாடுகள் மூலம் மதிப்பு மேம்படும். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த விமர்சனங்கள் குறையும். சகோதர உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தாமதம் மறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️அஸ்வினி : ஈடுபாடு உண்டாகும்.
⭐️பரணி : மதிப்புகள் மேம்படும்.
⭐️கிருத்திகை : விமர்சனங்கள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சூழ்நிலை அறிந்து பேசுவது நன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். செய்கின்ற செயல்களில் கவனம் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️கிருத்திகை : தீர்வு கிடைக்கும்.
⭐️ரோகிணி : மாற்றம் பிறக்கும்.
⭐️மிருகசீரிஷம் : கவனம் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பும், ஆறுதலும் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. காரசாரமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்கள் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் சாதகமற்ற சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், புரிதலும் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
⭐️பூசம் : அனுபவம் கிடைக்கும்.
⭐️ஆயில்யம் : புரிதல் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
பொருளாதாரம் தொடர்பான பிரச்சனை குறையும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதிய நம்பிக்கையும் தெளிவும் ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். சாந்தம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️மகம் : பிரச்சனை குறையும்.
⭐️பூரம் : தெளிவுகள் பிறக்கும்.
⭐️உத்திரம் : ஆதாயகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
வியாபார பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். கற்றல் திறனில் சில மாற்றம் ஏற்படும். தாயாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அறப்பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.

⭐️உத்திரம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
⭐️அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
⭐️சித்திரை : மாற்றம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். தான தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் கிடைக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். கௌரவ பொறுப்புகள் மூலம் மதிப்பு அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️சித்திரை : மேன்மை ஏற்படும்.
⭐️சுவாதி : ஈடுபாடு உண்டாகும்.
⭐️விசாகம் : மதிப்பு அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
பேச்சுகளில் கனிவு வேண்டும். சிந்தனைப்போக்கில் கவனம் வேண்டும். வரவுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். காப்பீடு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் விசயத்தில் சிந்தித்துச் செயல்படவும். திடீர் பயணம் மூலம் மாற்றமான அனுபவம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அமைதி வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

⭐️விசாகம் : கனிவு வேண்டும்.
⭐️அனுஷம் : குழப்பம் உண்டாகும்.
⭐️கேட்டை : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். இழுபறியாக இருந்துவந்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களை அறிவீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் ஆதாயம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்.

⭐️மூலம் : வேறுபாடுகள் நீங்கும்.
⭐️பூராடம் : ஆதரவான நாள்.
⭐️உத்திராடம் : ஆதாயகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் மூலம் புதிய கண்ணோட்டம் உண்டாகும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை குறைத்து கொள்ளவும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
⭐️திருவோணம் : விவேகம் வேண்டும்.
⭐️அவிட்டம் : தெளிவுகள் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*
குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். பொழுதுபோக்கு செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். கலை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். பணி நிமித்தமான முயற்சிகள் சாதகமாக அமையும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.

⭐️அவிட்டம் : அனுபவம் வெளிப்படும்.
⭐️சதயம் : ஆர்வம் பிறக்கும்.
⭐️பூரட்டாதி : சேமிப்புகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் மற்றும் பாக்கிகள் வசூலாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இன்பம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
⭐️உத்திரட்டாதி : மாற்றமான நாள்.
⭐️ரேவதி : நிதானம் வேண்டும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews