










மதிப்பீட்டுரையினை
ஓய்வு பெற்ற அதிபர் ஆ.சிவநாதன நிகழ்த்தினார்.






அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து
யா/ ஆவரங்கால் நடராஜா மகா வித்தியாலயத்தில் தரம் – 11 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவனுக்கும், யா/ வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் தரம் – 12இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவனுக்கும்,
யா/ கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயம் தரம் – 06 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கோண்டாவில் நெட்டிலிப்பாய் கோயில் வீதியே சேர்ந்த மூத்த பிரஜைகள் குழு முதியோர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, மூத்தோர்களை கௌரவிப்பதற்காக ரூபா 25,000 நிதியும் நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டதுடன்
யா/துன்னாலை தெற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக மாணவர்களின் துவி்சக்கர வண்டிகள், மற்றும் ஆசிரியர்களின் மோட்டார் சைக்கிள் நிறுத்திவைப்பதற்க்குரிய பாதுகாப்பான கொட்டகை அமைக்க ரூபா 150,000 நீதி பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டதுடன்
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக,
56,000 ரூபா பெறுமதியான பல்வைத்திய சிகிச்சைப் பிரிவுக்கான உபகரணங்கள் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், ஆச்சிரம நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிர சைவ கலை பண்பாட்டு பேரவ உறுப்பினர்கள் நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.










இதேவேளை ஊவா மாகாணம் மொனராகலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற 195 மாணவர்களுக்கு 160,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை வழங்கிவைக்கப்பட்டன. இப்பாடசாலை எவ்வித அடிப்படை வசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ அற்ற மொனராகலை நகர் பகுதியிலிருந்து 15 கிலோ மீற்றர் பாதை சீரின்றி நிலையில் மலை உச்சியில் அமைந்துள்ள ஶ்ரீ கலை கிராமத்தில் உள்ள பாடசாலைக்கே இவ் உதவி வழங்கப்பட்டது.
அத்துடன் பாடசாலையின் கட்டிட கட்டுமானப் பணிக்காக 100,000 ரூபா நிதி பாடசாலை முதல்வர் மு.சுதாகரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் பாடசாலையில் தொண்டராசிரியராக கடமையாற்றும் ஆசிரியருக்கு மாதாந்தம் 10,000 ரூபா வழங்குவதாகவும்,
இவ் பாடசாலையில் இயங்குகின்ற ஶ்ரீ கலை அறநெறிப்பாடசாலை ஆசிரியருக்கு மாதாந்தம் 10,000 ரூபா வழங்குவதாகவும் சந்நிதியான் ஆச்சிரமம் உறுதியளித்துள்ளது.
இவ் உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.