
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இயக்கச்சி புனித பிரான்சிஸ்சவேரியார் ஆலயம் இன்று 16/02/2025 காலை யாழ் ஆயர் பேரருட் தந்தை ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களினால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.



யாழ் ஆயர் தலைமையில் இன்று காலை 07.00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானதுடன் திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது
இந்நிகழ்வில் அருட்தந்தையினர்,கட்டைக்காடு, செம்பியன்பற்று பங்கு மக்கள்,பொது மக்கள்,இராணுவத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.