
விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.





அவரை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்றிரவு நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா, யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.