
யா.அன்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி பாடசாலை அதிபர் திரு கண்ணதாசன் தலைமையில் நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.




























முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் இசை முழங்க வரவேற்க்கப்பட்ட மங்கல சுடர் ஏற்றப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின

















































தொடர்ந்து விளையாட்டு போட்டியை சம்பிரதாயபூர்வமாக நிகழ்வின் பிரதமராக பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அம்பன் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி சிவன்சுதன் விளையாட்டு போட்டியை சம்பிர்தாயபூர்வமாக தொடக்கிவைத்தார்.
கம்பன், பாரதி, வள்ளுவன், ஆகிய மூன்று இல்லங்களுக்கு இடையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் வள்ளுவன் இல்லம் முதலாம் இடத்தினையும், கம்பர் இல்லம் இரண்டாமிடத்தினையும், பாரதி இல்லம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டன.
இந்நிகழ்வில் கருத்துரைகளை நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் தலைவன் பாடசாலையில் முன்னாள் அதிபர் சோமஸ்கந்தர் வாகீசன் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அம்மன் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவ கலாநிதி சிவசுதன் ஆகியோர் நிகழ்த்தினா்.
தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதில்களையும் சான்றிதழ்களையும் விளையாட்டு போட்டிக்கு பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள் வழங்கி கௌரவித்தனர் இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், அயல் பாடசாலை அதிபர்கள் என பலரும் கபந்துகொண்டு சிறப்பித்தனர்.