எதிர்வரும் 21, 22ஆம் திகதிகளில் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யாவ்வல பஞ்ஞாலோக தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் அழைக்கப்பட்டுள்ள 21, 22 ஆம் திகதிகளில் 200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளுக்கு சமூகமளிப்பதை தவிர்த்து பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுப்பதென்ற தெளிவான தீர்மானத்தை எடுத்துள்ளோம்.
ஆனால், எதிர்வரும் 25ஆம் திகதி அதிபர், ஆசிரியர்களை கடமைக்கு சமூகமளித்து இந்த நாட்டு பிள்ளைகளுக்கான கற்பித்தலில் ஈடுபட்டு ஒளியேற்றுமாறு அழைப்பபு விடுக்கின்றோம்.
25ஆம் திகதி நாம் பாடசாலைகளை திறப்போம். கடமைக்கு வந்து உரியவாறு கற்பித்தல் நடவடிக்கைளை முன்னெடுப்போம். அத்துடன் நாம் நின்றுவிடப்போவதில்லை.
முதற்கட்டமாக அமைச்சரவை உபகுழுவால் பரிந்துரைக்கப்பட்ட சம்பளத்தீர்வை முதல் நடவடிக்கையாக செலுத்த வேண்டும்.
அதேபோன்று நீண்ட பேச்சுவார்த்தைக்கு அமைய தயாரிக்கப்பட்ட யாப்புக்கு அமைய இந்த நாட்களில் பிரதித்திபெற்ற சுபோதினி அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அதுவரை தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக்கொண்டு கற்பித்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம் என இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்