
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் AIA காப்புறுதி நிறுவன அனிசரணையில் பருத்தித்துறை, மருதங்கேணி, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளின் வழிகாட்டலுடனான தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு நடை பயணியும், பரிசளிப்பு விழாவும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை மருத்துவ அத்தியட்சகர் யோ.திவாகர் தலமையில் நேற்று 25/02/2025 காலை 7:30 மணியளவில் ஆரம்பமானது.











முதல் நிகழ்வாக நெல்லியடி மாலிசந்தி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து நடை பவனியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மண்டபம் வரை சென்று அங்கு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன இடம் பெற்றதனை தொடர்ந்து கருத்துரைகளை சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட மாவட்ட தொற்றுநோய் தடுப்பு பிரிவு வைத்திய நிபுணர் சு.சிவகணேஸ், வடமராட்சி கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் மோ.தெய்வேந்திரா, கரவெட்டி பிரதேச உதவி பிரதேச செயலர் திருமதி சிவகாமி உமாகாந்தன், பிரதம விருந்தினராக கபந்துகொண்ட யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன், AIA காப்புறுதி நிறுவன வடக்கு கிழக்கு மாகாண முகாமையாளர் க.செல்வராஜன், நெல்லியடி AiA காப்புறுதி நிறுவன முகாமையாளர் ரகுபரன், ஆகியோர் நிகழ்த்தினர்.








தொடர்ந்து தொற்றுநோய் தொடர்பாக நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்காக பரிசில்களை நிகழ்வின் பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் AiA. காப்புறுதி நிறுவன அதிகாரிகள், பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை விசேட வைத்திய நிபுணர்கள், மருத்து அதிகாரிகள், தாதிய உத்தியோகஸ்தர்கள், உட்பட்ட உத்தியோகத்தர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கபந்துகொண்டு சிறப்பித்தனர்.