
இன்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் 128 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையினை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாதகல் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.