நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதீயூதினின் வீட்டில் உயிரிழந்த சிறுமி இஷாலினியின் மரணம் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைத்தவுடன் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
எனினும் ரிஷாட் பதியூதினின் மனைவியின் சகோதரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படாதென குறிப்பிடப்படுகின்றது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
எப்படியிருப்பினும் அவரால் தான் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதாக ரிஷாடின் வீட்டில் இதற்கு முன்னர் பணியாற்றிய பெண் ஒருவர் தெரிவித்தள்ளார். ஆனாலும் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த குற்றச்சாட்டுகள் எதுவுதும் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை. அவரது கையடக்க தொலைபேசி அரச பகுப்பாய்விற்குட்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக பல்வேறு விசாரணைகள் தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதற்கான விசாரணை அறிக்கைகள் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைத்த பின்னர் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.