மலையக பாடசாலைகளிற்கு சந்நிதியான் ஆச்சிரமம் 400,000 ரூபா பெறுமதியான  உதவிகள்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால்  பண்டாரவளை – கொஸ்லந்த பகுதியில் அமைந்துள்ள ப/ ஶ்ரீ கணேஷா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு ரூபா 150,000 பெறுமதியான கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட பிள்ளையார், எலி ஆகிய சிலைகள் வழங்கப்பட்டன. அதேவளை பதுளை- வெலிமடை, வோர்விக் பகுதியில் கஸ்ட பிரதேசத்தில் அமைந்துள்ள ப/ சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற 160 மாணவர்களுக்கு ரூபா 150,000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள்  வழங்கிவைக்கப்பட்டதுடன்,
பாடசாலையின் அடிப்படை  தேவைகளுக்காக  ரூபா   100,000 நிதியும்  பாடசாலை முதல்வரிடம் கையளிக்கப்படுள்ளது.
பதுளை- எட்டாம்பிட்டிய, 2 ம் பிரிவில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் கோரிக்கைக்கு அமைவாக,
பயன்பாடற்று பழுதடைந்த நிலையில் காணப்பட்ட  தேரினை திருத்தி வழங்குவதற்க்காக சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத்தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இவ் உதவித் திட்டங்களை வழங்குவதற்க்காக சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையில்  தொண்டர்கள்  நேரடியாகச் சென்று உதவிகளை வழங்கிவைத்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews