
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு கலைமகள் முன்பள்ளி சிறார்களது 2025ஆம் ஆண்டுக்கான சுயதொழில் சந்தை இன்று(6) இடம்பெற்றது.
முன்பள்ளி முதன்மை ஆசிரியர் தலைமையில் இன்று காலை மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது


குறித்த சந்தையில் சிறார்கள் தமது வீட்டுத் தோட்டத்தில் விழைந்த காய்கறிகள்,தேங்காய், கீரை வகைகள், பழங்கள், கைப்பணிப் பொருட்கள், கற்றல் உபகரணங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
சிறார்கள் மகிழ்ச்சியுடன் தமது விற்பனைப் பொருட்களை வியாபாரம் செய்த அதேவேளை பெற்றோரும், பாடசாலை மாணவர்களும் சிறுவர்களிடம் பணம் கொடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.



குறித்த மாதிரி சந்தை சிறார்களின் தனி ஆளுமை விருத்தியை வெளிக் கொண்டுவரும் வகையில் காணக்கூடியதாக இருந்ததுடன் நிகழ்வில் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.