வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை

கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் வேகமாகப் பரவி பன்றி வளர்ப்புப் பண்ணைகளில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்திய ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி – பளை மற்றும் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேசங்களில் அமைந்திருந்த 5 பன்றிப்பண்ணைகளிலும் பரவி பன்றிகளில் பலத்த உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி ஐந்து பண்ணைகளிலும் பன்றிகளின் குருதிமாதிரிகள் பெறப்பட்டு பேராதனை மிருகவியல் ஆராய்ச்சி நிலையத்தால் நோய் உறுதிப்படுத்தப்பட்டமையை தொடர்ந்து இப்பண்ணைகளை உடனடியாக மூடி பண்ணையின் சகல நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு இப்பண்ணைகள் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கடந்த மூன்றுதினங்களுள் மூடப்பட்டுள்ளன.
ஆபிரிக்க பன்றிக்காய்சலானது மனிதரில் நோயை ஏற்படுத்தாத போதும் பன்றிகளில் மிக வேகமாகப் பரவி அவற்றில் பலத்த உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோயாகும். நோயுற்ற பன்றிகளின் நேரடி தொடுகை மூலமாக மட்டுமன்றி மனித உடல், உடை மற்றும் வாகனங்கள் ஊடாகவும் வேறு பண்ணைகளில் நோய் பரவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் நோய்தொற்று கண்டறியப்பட்ட சகல பண்ணைகளையும் தற்காலிகமாக மூடி பண்ணை நடவடிக்கைகளை முடக்கி வைப்பதற்கு திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews